தமிழா நீ சிந்திப்பாயா?

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்
 

மிழ்நாடு விஞ்சும் தனியேடு கொஞ்சும்
       தனிநூலிற் பூத்த குறளாய்
அமிழ்தான வண்ணம் அகிலத்தை எண்ணும்
       அறிவோடு யர்ந்த குரலாய்
இமையோடு கண்போல் எழுங்காவல் கொள்ளும்
       இனமானம் கொண்ட உறவால்
எமைவென்ற காலம் இறந்தோடு மாமோ?
       இயமர்கள் வந்தார் நிலமே!

றிதாகி மக்கள் வயலோடு வேக
       வருநீர்க்கு மிட்டார் மறிப்பே !
குறியாகிக் கேள்விக் குடலாகிப் போகக்
       குழிதோண்ட வைத்தார் குடியே !
முறியாக வீதி முழுக்காடு வெட்டி
       முடிவாகக் கனியம் முடித்தார்
அறியாத முட்டாள் அடுக்காக்கி வைத்தார்
       அனலாகிப் போன துமணே !

மிழ்நாடு தீய தலுங்கான மெல்லாம்
       தடிவைத்துப் பாய நிறைந்தார்
குமிழான வாறு கொடுங்கோன்மை யாடி
       குவைசெல்வ மெல்லாம் குடித்தார்
திமிரான ஆட்டம் திருநாடு போகத்
       தெருவெல்லாம் விற்று முடித்தார்
சுமையான வாறு தமிழ்நாடு போகச்
       சினிமாவைக் கொண்டு திணித்தார்

கெடுவாகச் சொல்லி குடியாக நின்று
      கொடுவாக்கு என்றே குரைப்பார்
முடிவாகச் சைவம் முகமாடுஞ் செந்தேன்
      முதலான முத்துத் தமிழை
நடுவாக வைத்து நரியாகத் தின்பார்
       நறையான நாட்டை எரிப்பார்!
பொடிபோடும் மாந்தர் பிசசாகி வந்து
      புதிதாகத் தீய்ப்பர் புரிவாய்!

மிழோடு எண்ணித் தனியான பூமித்
      தகையாக வாழ்வை தமிழா
துமியாக நில்லாய்! துடிப்பான மண்ணின்
      துகிலாக மானம் உமிழ்வாய் !
செமியாத சோறு உணவாக மாட்டா
      தெளிதேனில் உண்ணும் மருந்தே
எமையாள வைக்கும் இனமானம் காக்கும்
       எடுபாடம் இன்றே புரட்சி!


 

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்