காற்றுப் போக்கும் காலப் போக்கும்
கவிஞர் கே.பி.பத்மநாபன்
காற்றுப்
போக்கும்
காலப் போக்கும்
கடினங்களை
நகர்த்துவனவல்ல.
காற்றுப்போக்கில்
போனவை திரும்பிடினும்
காலப்போக்கில்
போனவை போனவைதான்.
காற்றுப்போக்கை
எதிர்க்கும் மனிதர்க்குக்
காலப்போக்கை எதிர்க்கும்
வல்லமை ஐயப்பாடே.
அவ்வல்லமை கொண்டிட்ட
சிலர்மட்டுமே என்றும்
வாழ்கிறார்கள்
வரலாற்றில்---
வரலாறாய்...
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|