காதல் கவிதை

முத்துவேல்


உனக்காக காத்திருந்தேன்,
என் கடிகார முட்கள் மெதுவாக நகர்கின்றன,
உன்னோடு பேசிகொண்டிருந்தேன், அவை வேகமாக நகர தொடங்கின,
காலம் மாறி போச்சு ...

என் பேனாவில் உன் பெயரை எழுதினால்,
அவற்றின் முனைகள் உன் பெயரை குத்தி காயபடுத்தும்,
ஆதலால், என் விரல்களால் உன் பெயரை எழுதுகிறேன், காகிதத்தில் ...................

உன் உதடும்,
என் உதடும்,
ஒட்டாமல்,
பார்த்துகொள்கிறதோ,
காதல் என்ற வார்த்தை,
உச்சரிக்கும் போது........

உன்னுடன் சேருந்து வாழ,
கல்லில் அறை கட்டுகிறேன்,
சேருந்தே இருப்போம் நாம் கல்லறை போகும் வரை ..........

எனக்கு பிடித்திருந்தது,
உனக்கு என்னை பிடிக்காததற்கு முன்,
எனக்கு பிடிக்கவில்லை,
உனக்கு என்னை பிடித்த பின்,
என் புகை பழக்கம் ..


 

muthuvel_a2000@yahoo.co.in