மின்னல்களில்
கைவிடப்பட்டவர்கள்
எம்.ரிஷான்
ஷெரீப், இலங்கை
இருப்புக்கருகே
மூர்க்கத்தனத்தோடு
பெரும்
நதி
நகரும்
ஓசையைக்
கொண்டுவருகிறது
கூரையோடுகளில்
பெய்யும்
ஒவ்வோர்
அடர்மழையும்
வீரியமிக்க
மின்னலடிக்கும்போதெல்லாம்
திரள்முகில்
வானில்
இராநிலாத்
தேடி
யன்னலின்
இரும்புக்
கம்பிகளைப்
பற்றியிருக்கும்
பிஞ்சு
விரல்களை
அழுது
கதற
விடுவித்துக்
கொண்டோடுகிறாள்
குழந்தையின்
தாய்
தொடர்ந்து விழும் இடி
ஏதோ ஒரு
நெடிய மரத்தை எரித்து அணைய
நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப் பற்றியிருந்தாய்
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்
mrishanshareef@gmail.com
|