ஆதிமூலம் எங்கள் மண்ணடா !

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்
 


புதியபூமி யாகவரும் பொங்கும் மண்ணடா - நாம்
        புதுவிதையைத் தூவிவரும்
        பூக்கும் மண்ணடா !
விதிபுதிதாய் எழுதப்போகும் விளக்கம் நாமடா - எங்கள்
        விளைநிலங்கள் வேதமிடும்
        விளைச்சல் தானடா!

திபுதிதாய் ஓடிவரும் நாம்த மிழரே  - நாடி
        நரம்புஎலாம் புதுக்குருதி
        நாட்டும் தமிழரே !
அதிசயங்கள் நிகழ்த்தப்போகும் ஆதி பூமியே  -  இது
       அற்புதங்கள் படைக்கவரும்
       அறத்தின் கோலமே!

விடைபுதிதாய் ஆக்கப்போகும் வேள்வி ஈதடா- எங்கள்
       வினைபுதிதாய் கேட்கப்போகும்
       விளக்கம் ஈதடா !
கடைபுதிதாய்க் காணப்போகும் களத்து வேதமே - மண்ணின்
       காட்சியொடு கணிதம்வைக்கும்
       கணக்கு ஈதடா!

தேன்தமிழர் ஏந்திவரும் தீப ஊர்வலம் -இது
       தேசமெங்கும் ஆர்ப்பரிக்கும்
       சிறப்பு ஊர்வலம் !
பூந்தமிழர் பூத்துவரும் பொன்னின் ஏடிதே - இந்தப்
       பூமியொடு பிரசவிக்கும்
       பூக்கள் வாசமே!

ூவாயி ரம்ஆண்டு முகத்துக் கவசமே - இன்னும்
       மூத்தகுடி யென்றுபுகழ்
       முகிழ்த்து வருகுதே!
சாகாத மொழியிதென்கும் சரிதம் சொல்லுதே-இந்தச்
       சரித்திரத்தின் கல்வெட்டு
       உரிமம் ஆக்குதே!

தேவாரம் திருவாசம் திளைத்த வேரடா - எங்கும்
       திருமுறையைத் தோத்திரத்தைத்
       தொடுக்கும் தேரடா!
ஆவாரம் காடுஇது அர்த்தம் ஆயிரம் - அன்றே
       அன்பென்று கடவுளிட்;ட
       ஆதிமூலமே இது
       ஆதி மூலமே!




 

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்