சித்திரையும் சித்திரமும்

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்
 


ுதிதெனத் தளிர்கள் பிரசவித் திடுமோர்
        பூத்திடும் வசந்தமும் புதிதே
நதியொடு அலைகள் நடையிடும் அழகில்
        நடித்திடும் ஆயிரம் நிலவே
மதியொடு உலவும் மழைமுகில் மண்ணின்
        வயலொடும் பாடுமே மருதம்
அதிசயம் புரியும் அணங்குசித் திரையின்
       அரங்கினில் இதுவெலாம் அழகே!

புதியதாம் பழங்கள் நறியவாம் மலர்கள்
       பொங்கிடப் படைத்ததெம் பொதிகை
விதியது வெனினும் வியத்தகு உலகின்
       வேரதே தமிழரின் விருட்சம்
அதிசயம் மூன்று ஆயிரம் வருடம்
       ஆனதாய்க் கண்டனர் அகழ்வோர் !
பதியதில் அனைத்தும்; பண்டையில் மலர்ந்த
       பழங்குடித் தமிழரின் பணியே!

ித்திரை வசந்தம் செப்பிடும் மனிதம்
       செந்தமிழ் பூத்திடும் திறையே
முத்திரை பதித்த விஞ்ஞன மெல்லாம்
        விதையென இட்டதெம் கலையே!
புத்தியில் விளைந்த நித்திலம் அனைத்தும்
        பெருங்கடற் பரப்பிடும் வணிகம்
அத்தனை விதத்தும் அறிந்தனன் தமிழன்
        அற்புதச் சித்திரை அளந்தே!

த்தனை விருட்சம் எத்தனை மலர்கள்
        இன்றுபூப் பெய்தின நிலங்கள்
வித்தென முளைக்கும் நித்திய நிகழ்வு
        விளைநில மாக்கின புலங்கள்
சத்திய வேட்கைச் சாற்றிடும் பூசைச்
        சரிநிக(ர்) ராக்கினர் மறையோர்
முத்திரைப் பதியின் சித்திரை புதிதாய்
        முகிழ்த்தது மண்ணெலாம் சிறப்பே!
 



 

 



உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்