தேர்தல் சிறப்பு லிமரைக்கூகள்

முனைவர் வே.புகழேந்தி, பெங்களூர்
 


சுற்றுலாச் செல்வதற்கா விடுமுறை?
தேர்தலன்று தவறாமல் வாக்களிக்க வேண்டும்
இன்றைய இளைய தலைமுறை.

ைவிரலில் வைத்திடும் அழியா-மை
உலர்வதற்குள் வாக்குகளை எண்ணினால் தான்
தேர்தல் ஆணையத்திற்கு பெருமை.

கொட்டினாலும் தலையில் பணமழை
மனசாட்சி படி வாக்களி சாவடியில்
பொழிந்திடினும் தேர்தலன்று கனமழை.

டுப்பதேன் வேட்பாளருக்கு ஆரத்தி
ஏ தமிழா! வீசியெறி தட்டினை.
தேர்தலுக்கு-பின் தாக்கிடுவர் துரத்தி

ந்த பொத்தானென்ன தீட்டா?
வாக்காளனே! எவரும் வேண்டாம் எனில்
அழுத்திட தயங்காதே 'நோட்டா'

வறாமல் அளிக்கும் வாக்கு
தன்னாலே மாற்றி விடும் நண்பா
தரங்கெட்ட அரசியலின் போக்கு.

ட்டளிக்க நீண்ட வரிசை
தொண்டர்களில் என்றும்
தலைவர்களை உருவாக்கிட
புறக்கணிப்பீர் அரசியல் வாரிசை.

ாக்களிக்க வாங்கினால் காசை
வருந்திடுவாய், மனம் நொந்திடுவாய்- அது
ஒருநாள் கூத்திற்கான மீசை.

ண்ணிக்கை மையத்தில் இயந்திரம்.
காத்தல் வேண்டும் திங்கள் ஒன்று
அடைய வேண்டுமெனில் சுதந்திரம்.

ண்பனும் ஆகிடுவான் எதிரி
தேர்தல் கால கூட்டணி என்பது
சந்தர்ப்பவாதத்திற்கு முன் மாதிரி

 


 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்