ஹைக்கூ கவிதைகள்

முனைவர் ச.சந்திரா

தினம்தினம் நோகடித்தாலும்
கடமையைச்செய்யும் காகித மனிதன்
தினசரி காலண்டர்

மதிப்பில் உயர்ந்தது
பிறந்த அன்றே மரணத்தைச்சந்திக்கும்
செய்தித்தாள்

கண்ணாடிச்சட்டத்திற்குள்
கடமையைஉணர்த்தும் கண்ணியவாதி
கடிகாரம்

மங்கையர் மானம் காக்கும்
தகுதி தரம் உரைக்கும்ஆடை
புடவை

விடிய விடிய விழித்திருந்து
நிலவுலகிற்கு வழிகாட்டும் மௌனம்
கலங்கரை விளக்கம்

அருகருகே இருந்தாலும்
முட்டிமோதாது சுழலும் சமாதானம்
மின்விசிறி




neraimathi@rocketmail.com