உனக்கே உனக்காய்

எஸ். பாயிஸா அலி,கிண்ணியா

இந்தப் பெறுபேறும் பொய்த்துப்போனதற்காய்
வருத்திக் கொள்ளாதே உன்னுணர்வுகளை
கல்வித்தரம் வேண்டுமென்றால்
உறுதிப்படுத்தப்படலாம் பெறுபேறுகளால்
ஆனாலும்
ஒருபோதும் தீர்மானித்து விடுவதில்லை
பெறுபேறு மட்டுமே
ஒருவரின் வாழ்க்கைத்தரத்தை.
வடிந்துபோகா வெள்ளமொன்றை
வரலாறு சொல்லவில்லை.
இந்தப்பாதை முடிந்தாலென்ன
திரும்பிப்பார்
இன்னமும் ஆயிரம் பாதைகள்
வாசல்கதவு திறந்து வைத்தே
வழிபார்த்துக் காத்திருக்கு மாலைகளோடு
உனக்கே உனக்காய்.


sfmali@kinniyans.net