சொந்தமென நீயிருப்பாய்...!

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்


மிழ்ச்சுடர் தரணிசொல
மூவேந்தர் முகம்பொழிய
பட்டிமன்ற நடுவரென
பணிசெய்து செம்மலென
வங்கி வாழ்த்துரைக்க
வழங்கிய நூல்விருதில்
பல்துறையின் பட்டறையில்
சொல்மனது சிந்தார்க்க
மோகன்என முன்னுரைக்கத்
தாகமெனத் தமிழுலகின்
தங்கமென வந்தவரே...!
பொங்கி வருமுலகப்
பூமுகத்தில் வாழ்த்துரைக்க
தேர்கொண்டு வந்தவரே
வேர்கொண்டு ஆர்த்தவரே...
நாளை தமிழகத்தின்
நாதமெனச் சொல்லவரும்
வேளை உருவாக்கி
வீற்றிருக்கும் நேரமதில்
காலம் வந்ததெனக்
கட்டளையை அனுப்பியதார்?
மூளையற்ற மேலிறைவன்
தாளைத் தொழுதுவிட
தத்துவங்கள் செய்ததுமேன்?
சித்தன் நீமறையாய் !
சுற்றுலக மெல்லாமும்
சுற்றிவரக் காண்பமடா!
செந்தமிழே இருக்கும்வரை
சொந்தமென நீயிருப்பாய் !
 

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்