ஐந்தமிழாய்  வாழ்க  வாழ்க

பாவலர்  கருமலைத்தமிழாழன்
 

 

ங்கங்கள்   தமிழ்வளர்த்த   மதுரை   மண்ணில்
          சந்தனமாய்   வாழ்கின்ற   தமிழண்   ணல்போல்
சங்கநூலாய்   விளங்கிட்ட   மோகன்   இன்று
          சாகாத   புகழுடம்பின்   வரத்தைப்   பெற்றார்
அங்கங்கள்   எல்லாமே    தமிழு   றுப்பு
          அவர்துணையாம்   நிர்மலாவும்   தமிழ்ப்பெ   யர்ப்பு
செங்கதிரைப்    போலொளிரும்   ஞானச்   சிரிப்பு
          செம்மாந்த   பண்புகளின்    இமயப்   பொருப்பு ! 
 

ணிந்துரையால்    சிலம்பொலியார்    பெற்ற   தைப்போல்    
           ஆய்வுரையால்   புகழ்பெற்றார்   அவனி   யெல்லாம்                  
கணினியைப்போல்    நினைவாற்றல் !   இவரின்   நெஞ்சம்
          கன்னிமரா   நூலகத்தின்   அருமை   மஞ்சம் !
பணியிவர்க்கோ   படிப்பதுவும்   படித்த  வற்றைப்
          பார்படிக்க   வடிப்பதுவும்   தினவா   டிக்கை
மணியொலியைப்   போலொலிக்கும்   இவரின்   பேச்சில்
          மனந்தன்னைத்   தெளிவாக்கும்   கருத்தொ    லிக்கும் !

ந்தவிதழ்    திறந்தாலும்    இவரெ   ழுத்தே
          எல்லாமும்    வாழ்வுயர்த்தும்   நெறியெ   ழுத்தே
சிந்தனையைத்    தூண்டுகின்ற   பட்டி   மன்றம்
          சிலிர்க்கவைக்கும்   சொற்பொழிவோ   கனியின்   சாறு !
செந்தேனீ   தமிழ்த்தேனீ   ஆசான்   மோகன்
          செழுமைமிகு   இலக்கணத்துப்   புலமைத்   தேனீ
ஐந்துவகை    தமிழென்றும்   வாழ்தல்   போன்று
          ஐயாவும்   வாழ்ந்திடுவார்   வாழ்க   வாழ்க !

 

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்