ஒரு கவிதையின் மரணம்

கவிஞர் மஞ்சுளா, மதுரை


நினைவுக் குகையிலிருந்து
வெளிப்படுகிறது
ஒரு கரம்

வாழ்வின் இருப்பினை
அறிய முடியாத
யாரோ ஒருவரின்
கண்களிலிருந்து கசியும்
இரத்தம் துடைக்க...

இதயக் கூட்டில்
நிரம்பி வழியும்
துக்கம் மாற்றி அமைக்க...

செயல்பாட்டினை
இழந்து தவிக்கும் மனதை
ஒரு நிலைப் படுத்த....

முடிந்த வரையெல்லாம்
செயலினை வெளிப்படுத்திவிட்டு

தன்னயே மறந்து விட்ட நிலையில்
யார் வீட்டு அலமாரியிலோ
யார் பார்வையிலும் பட்டு விட முடியாதபடி
கிழிந்த நிலையில்
வாய் பூட்டப்பட்டு
மரணித்துக் கிடக்கிறது
ஒரு கவிதை
 


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்