ஹைக்கூ கவிதைகள்
கவிஞர் தட்சணா
மூர்த்தி
தாலி ஏறியதும்
இறங்கி விடுகின்றது
தந்தையின் பாரம்
உதிக்கும் சூரியன்
தெளிவாகத் தெரிகிறது
மலை முகடு
கொட்டும் மழை
கீழே விழாமல் நிற்கின்றது
தலைவர் சிலை
அழுகிய பழங்கள்
சுருங்கிய படி இருக்கிறது
கடைக்காரர் முகம்
கடலில் கணவர்
தத்தளித்துக் கொண்டிருக்கிறார்
கரையில் மனைவி
வேப்பமரத்தில் படர்ந்தாலும்
இனிக்கத்தான் செய்கிறது
கோவை பழம்
சென்ரியூ
விளக்கு ஏற்றியும்
வெளிச்சம் இல்லை
அறியாமை இருள்
வெட்டிய மாங்கனி
குட்டிப்போட்டு இருக்கிறது
நெளியும் புழு
வட்டமிடும் கழுகு
வயலில் ஒளிந்து கொள்கின்றது
விரையும் எலி
அமோக விளைச்சல்
நட்டத்தை ஏற்படுத்துகிறது
விலை நிலவரம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|