அதிசயமே!
பாரதி,
ஜேர்மனி.
மகிழ்ச்சியாகத் தலையசைத்து
நறுமணத்தைப் பரிசாய் எனக்களித்து
மழையைக் கண்டால் குளித்தெழுந்து
மணித்துளி கரைந்தால் கருக்கிழந்து
வண்ண நிறங்களில் உடையணிந்து
எண்ண முடியாத் தோழருடன்
ஒற்றைக் காலில் நர்த்தனமாடி
ஓடிவா! என்று எனை அழைத்து
மலர்ந்து மனதையும் மலரவைப்பதனால்
உனை...... மலர் என்றனரோ? மானிடரும்....
scanma2000@t-online.de
|