ஹைக்கூ

கவிஞர்  ஷர்ஜிலா யாகூப், கம்பம்





மழை நின்றும்
முழுதாய் நனைகின்றேன்
கடந்துச் செல்கிறது வாகனம்

அணிந்த புத்தாடை
மலர்ச்சியாக இருக்கிறது
குழந்தையின் முகம்

நெகிழிப் பூவினை
சுற்றிச் சுற்றி வருகிறது
மூக்கடைத்த தேனீ

காகிதப்பூ மாலை
விற்காததால் வாடியிருக்கிறது
கடைக்காரர் முகம்

அடை மழையிலும்
சாலையில் நகராமல் நனைகிறார்
தலைவர் சிலை




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்