ஹைக்கூ

கவிஞர் இரா.இரவி
 


அழுகை நிறுத்தியது
அலைபேசி கற்றதும்
குழந்தை!

நான்கு சுவருக்குள் நடப்பதை
நாடு முழுவதும் ரசிப்பு
தொலைக்காட்சி நிகழ்ச்சி!

பல்டி அடிப்பதில்
வல்லரசர்கள்
அரசியல்வாதிகள்!

சின்னத் திருடனுக்குச் சிறை
பெரிய திருடனுக்கு
வெளிநாடு!

பாகவதரை மிஞ்சினார்கள்
சுதிமாற்றிப் பாடுவதில்
அரசியல்வாதிகள்!

குற்றவாளிகளிடம்
சிறையிலும் பாரபட்சம்
முதல் வகுப்பு!

தருகின்றனர் முன்னுரிமை
பித்தலாட்டக்காரனுக்கு
அரசியலில்!

நியாய விலைக் கடையில்
அநியாயம்
எடை குறைவு!

ஒருவரை ஒருவர் மிஞ்சினர்
ஊழல் புரிவதில்
அரசியல்வாதிகள்!

விடுமுறை நாட்களில்
குடிமகன்களால் நிறைகிறது
மதுக்கடை!
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்