நேரிலா நேரிழை !
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
உலகத்
தமிழை உதித்ததோர் பூமித்
தலமாக வேவந்த தாயாய் - அலகின்
முதலாகப் பூத்து மொழிப்பூ அவளாய்
விதையாக நின்றாள் விரும்பி !
பேசும் குரலாய் புவிமாந்தர் ஒன்றாக
வாசம் பரப்பும் வடிவுடையாள் - தேசமெலாம்
பாசமொழி ஆக்கிப் படியுரைக்கும் வண்டாகும்
நேசமொழி தானே இவள்!
இறைவனைப்
போற்றும் இசையாக நின்றே
மறையினை வார்த்தவளே வந்தாள் - குரலாக
யார்வந்தா லென்னவோ யாப்போடும் தூரிகை
நேர்கொள்;ள வைத்தாள் நிசம்!
காப்பியங்கள்
கண்டாள் கனந்துறையும் தெய்வமொழித்
தோப்பெனவே நின்றாள் துறையார்ந்தாள் - ஆப்பெனவே
பல்மொழியார் வந்தும் பகைமொழியார் வந்துமென்ன
வெல்லும் தமிழ்மொழியே வேர்!
என்னை
இழந்தேன் இவட்குத் தலைவணங்கிப்
பொன்னைத் தமிழெழுத்தாய்ப் பெற்றேனே – தன்நேரில்
இல்லா அழகெழிலாள் ஏகப் பரப்பிலெங்கும்
சொல்லாகி நிற்பாள் செகம்!
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|