எண்பத்திமூன்று ஆடியும் நினைவும் !

கவிஞர்  மணியரசன்
 




ந்தகப் புகையில் சுற்றிக்
கருக்கிடக் குவித்த குண்டில்
வெந்ததோர் காலம் ஆடி
வெட்டிய நெருப்பிற் சிக்கிச்
சந்ததம் குத்தித் தோண்டி
சடலமாய் நிறைந்த போதும்
அந்தகம் நிறைந்த மண்ணில்
அடித்தள மிருந்தோம் அம்மா!

டிகள் உருளும் போதும்
அடிக்கடி கலவ ரத்தின்
பேடிகள் கொலைகொள் ளைகள்
பெரும்பொருள் அழிப்பும், தீயுள்
மூடிய இலங்கை வேகும்
முற்றிலும் பெருகு ரத்தக்
கூடென வன்மு றைக்குள்
கொண்டது சரித மாமே!

ண்பத்தி மூன்று ஆடி
இனக்கல வரத்தில் ஆடிக்
கொண்டதோர் காட்சி யாகக்
குவியமும் வலையும் பற்றிக்
கண்டதோர் உலக முற்றும்
கரும்புகை சாட்சி யாகப்
பண்டிகை யாக மீளும்
பலிக்களம் சரிதம் சொல்லும்

மிழர்கள் கல்வி ஏற்றம்
சரித்திடல் வேண்டு மென்றால்
அமிழ்ந்திடத் தரப்ப டுத்தல்
ஆக்கிடப் பதியு தீனார்
அமைச்சரும் சிறிமா வோடு
ஆக்கிய சதியின் ஊற்றே
சுமையெனத் தமிழர் சாகும்
தொடர்கதை தொடர்ந்த தாமே!

வி
டுதலைத் தமிழர் பக்கம்
விளைந்ததும் போர்வந் துற்றும்
கொடுமுடிப் புத்த தேரர்
கூடினர் எனப்பல் நாடும்
படுபகை கொண்ட ஆட்சிப்
பட்டறை கணித்தார்! வையம்
தொடுமுடித் தமிழர் வாழும்
தேசம்நூ றாச்சு தாமே!

குட்டிமணி தங்க துரை
கொன்றிடச் சிறையின் வன்மம்
முட்டிய வாறே நூற்றார்
வகைதொகை யின்றிச் சாவை
எட்டிய வெலிக்க டையின்
இரும்பெனச் சிறையின் அந்நாள்
பட்டது புகைப்ப டத்துள்
பலியாகா(து) தென்றும் காணீர்!

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்