தமிழாய்... தமிழுக்காய்

மன்னார் அமுதன்

தமிழாய்த் தமிழுக்காய்த் தழைத்த செஞ்சூரியனே
விழுதாய் இவ்வுலகில் விதைத்தாய் பலவிதைகள்
பழுதான வுன்கனவைப் பார்மறுக் குமீழத்தைப்
படைப்போம் தமிழுக்காய்

கருவா யுருவாய் வாழ்ந்தாய் யெம்தமிழாய்
திருவாய் மலர்ந்தே ழகரம் தினமுரைத்தாய்
எருவாய் வீழ்ந்தாய் தமிழாய் தமிழுக்காய்
ஒருவாய் உனை ஏசுமா

தமி ழாய்த் தமிழுக்காய்த் தமிழரின் உரிமைக்காய்
எழுந்தாய் படைகொண்டு கடிந்தாய் உலகத்தை
முனைந்தாய் தமிழுக்காய் முழுவுலகம் படைக்கஅம்
முளையின் னுமெம் நெஞ்சிலே

படியாய் எவருக்கும் படிப்பித்தாய் எதிரிக்கு
கடியாய் எவரினையும் களத்திலே நிற்கையிலும்
விழுந்தாய் தமிழுக்காய் வீ ணாணதா ஈழம்
விடோம் நாம் தமிழர்




amujo1984@gmail.com