மறக்க முடியா யூலைமாதம்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
உலகில் எங்கும் நடைபெறாத
உள்ளத்தை உலுக்கிய சம்பவம்
இலங்கையில் நடந்தது தமிழருக்கு
ஈடில்லா துன்பம் அடைந்தநாள்
கலவரம் சீராய் உண்டுபண்ணி
கட்டவிழ்த் துகொலைகள் செய்தநாள்
விலங்குகள் போலவே சிறையினில்
வைத்த கைதிகளை கொன்றநாள்
மறக்க முடியா
யூலைமாதம்
மண்ணில் வாழும் தமிழருக்கு
இறந்த தமிழர் அனைவருக்கும்
அகிலம் நீதி வழங்கவில்லை
துறந்த புத்தர் அன்றிருந்தால்
துன்பத்தால் இரத்தக் கண்ணீரும்
அறத்தால் தர்;மம் நிலைநாட்ட
அகிலத்தை அன்றே அழித்திருப்பார்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|