யார் இந்த மாவீர்ர்?
புலவர்
முருகேசு மயில்வாகனன்
இனவாதம்
மேலோங்க ஈழப்போ ராட்டம்
மனமொழி மெய்களால் மீண்டும் – இனவழிப்பே
கல்வியிலே சிங்களத்தார் கைவைக்க காளையர்கள்
தொல்லை கொடுத்தனரே தேர்.
கரந்திருந்த போராட்டம்
காலத்தின் மாற்றம்
வரமாகப் பெற்றனரே வாய்ப்பை – தரமான
போரைத் தவறின்றிப் போற்றும் வகையிலே
சீராகச் செய்த சிறப்பு.
நெஞ்சேற வந்தகுண்டை நேரெதிர் கொண்டதனை
வஞ்சனையர் கண்டஞ்சி வாடியே – தஞ்சமென
ஓடி ஒழித்தனரே ஏக்கமுடன்இ எம்மவர்கள்
நாடினரே வெற்றிபல நன்கு.
கடற்புலிகள் சாகசங்கள்
கண்ணைக் கவரும்
கடமையின் காவலர்கள் காலம் – இடமளிக்கா
விட்டாலும் தாமுணர்ந்தே வீரச் செயல்களை
திட்டமிட்டுச் செய்த சிறப்பு.
வான்படை யோடு தரைப்படையும்
வானுயர
ஊனமின்றிப் போரில் உயர்ந்தனரே – தேனினிய
தாய்நாட்டைக் காக்கத்தான் தக்க 'பொலிஸ்'படையும்
கைவரப் பெற்றனரே காண்.
மாண்டாலும் கொள்கையில்
மாற்றமிலா மாவீர்ர்
ஆண்டதோர் காலமுண்டே அக்காலம் – மீண்டுவர
பாரெங்கும் செந்தமிழர் பக்குவமாய் வாழ்நாட்டின்
கூரறிவால் கூர்க்கும் சிறப்பு.
வெற்றிக்கு வித்திட்ட
வேங்கைகளின் வீரவாழ்வு
இற்றைவரை ஓங்கி ஒளிர்கின்ற – நற்பெயரை
சிற்றறிவு கொண்டோர் சிதைக்கத் துணிந்தார்கள்
பற்றுள்ளோர் பார்த்திருக்கார் பார்.
வெண்ணை திரண்டுவர வேற்றாரின்
ஆதரவால்
மண்மீட்கச் சென்றவரை மாற்றாரின் – குண்டுகளால்
கொன்றொழித்த சிங்களமே கொள்கை வகுப்பாரின்
பொன்மொழியின் கோட்பாடோ சொல்.
சூழ்ச்சியால் வென்றவரை
சூழ்ந்ததே பாவமின்று
வாழ்க்கையில் இன்பதுன்பம் வாய்ப்பாக - சூழ்ந்துநிற்கும்
எந்நேரம் ஏதென்றறி யாத மகிந்தர்க்கு
வந்தவினை நன்கறிய வாய்ப்பு.
மாண்டாலும் மாழாத மாவீர்ர்
மாசற்ற
காண்டற் கரியநற் காளையர்கள் – தீண்டாமை
என்னும் அரக்கனை ஏற்கா தொழித்தனரே
இன்னலையும் ஏற்றார் எதிர்த்து.
நடுகற்கள் என்றுமே
நாட்டுக்குச் சொல்லும்
வடுவாம் செயல்களின் வாய்ப்பை – நடுநின்று
ஆராய்ந் தறிந்துமே ஆவனசெய் ஆள்வோரின்
சீராம் கடமைச் சிறப்பு.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|