அனிச்சை போராட்டம்
கவிஞர் மஞ்சுளா மதுரை
வாழ்விற்கான
ஏதோ ஒன்றின்
முடிவு பற்றியே
சிதைந்து தேய்கிறது
முளை
உணர்வுகளை
தகர்க்க
எழுந்த அறிவோ
மீட்சியின்றி
தன்னை
உணர்கிறது
ஒரு
கை சொடுக்கலில்
தன்னை இழந்து
திரும்பதலில்
தன்னிச்சையின்றி
நிகழும்
அனிச்சைகளுக்குள்
பழகிய வாழ்வு பற்றி
எப்போதும்
சிந்திக்க
மறந்து விட்டு
தவறுகளுக்குள்
உண்மையோ
தன்னை
காறி உமிழ்கிது
ஒப்பிட முடியா
நிகழ்வுகளுக்குள்
குழைந்து செல்லும்
அழகான வாழ்வு பற்றி
நமக்குள் எப்போதும்
நிகழ்ந்து கொண்டே
இருக்கிறது
முடிவன்றி ஒரு போராட்டம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|