வண்ணத் தமிழுண்ண வா!

கவிஞர் கே.பி.பத்மநாபன்
 




ம்பன் கனிரசமும் காவியிளங் கோத்தேனும்
எம்பெருமான் முப்பாலும் ஏற்றபடி - செம்பவளக்
கிண்ணம்தாம் பாரதியின் பாடலிலே தாம்கலந்து
வண்ணத் தமிழுண்ண வா.

னிய தமிழிருக்க ஏனயல்மே லாசை?
கனியிருப்பக் காய்கவர்தல் கட்டம் - புனிதமுடை
எண்ணம் எழுச்சியுற ஏற்றதொரு சத்துணவாம்
வண்ணத் தமிழுண்ண வா.

ுறளமிழ்து நல்லுணவில் கூட்டாகக் கம்பன்
அறனிளங்கோ ஆய்ந்தகறி யாக - நறவெனவே
கண்ணதாசன் பாரதியும் காதலுடன் தானீய
வண்ணத் தமிழுண்ண வா.




கட்டம் - துன்பம்


 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்