நெருக்கமாகத் தொலைவு
தர்மினி
ஒர் நாள் ஈபில் உச்சி ஏறி
ஊர் பார்த்தேன்.
அங்கிருந்து,
என் ஊர் ஏராளந் தொலைவாம்.
எழுதப்பட்டிருந்தது, உண்மையது.
எட்டி நின்று என் சன்னல் திறந்தாலும்
எக்கச்சக்கத் தூரம் அது.
அறிவேனே.
ஒவ்வொரு நாள் காற்றுக்காகத் திறக்கும்
சாளரத்தின் கீழ்
விழுந்து கிடக்கும் பள்ளங்களோ பெரிது.
அது தெரியாத கண்களில்
நெடுந்தொலைவு என்ன கதை?
tharmini@hotmail.fr
|