பேராசிரியர் மோகன் எங்கே?
புலவர் முருகேசு மயில்வாகனன்
மதுரைமா நகர்தந்த மாமனிதர் மோகனோ
மனிதநேயம் கொண்டவர்தான் மக்கள் தோழர்
புதுமைசேர் எழுத்தாலே புனித னாகி
புகழோடு பூத்துக் குலுங்கி நின்றாய்
முதுமைக்கு முன்னரே முந்தி விட்டாய்
முன்செய் வினையிதுவே மூத்தோ ரறிவர்
அதனை அறியாதார் ஆதங்கப் படுவர்
ஐயனின் ஆருயிர் ஆண்டவன் திருவடியே!
ஆணழகன் மோகனிவன்
ஆழ்ந்தறி வாளன்
அன்னைத் தமிழாளின் அருமைப் புதல்வன்
காணற் கரிய கல்வி மானாய்க்
காட்டினாரே தன்னெழுத்தைக் கால மெல்லாம்
மாணற் கரிய மதுரை மணாளன்
மாசு மறுவற்ற பேரா சிரியர்
நாணரல்லர் நம்பிக்கை நட்சத் திரமோ
நாடலற நம்மைவிட்டுச் சென்ற தேனோ.
எழுத்தாள
னாய்த்திகழ்ந்தே ஏறுநடை பேச்சிலும்
ஏற்றமுற மேடைகளில் ஏறுபோற் றோன்றி
தழும்பலிலாப் பேச்சாலே தட்டிக் கொடுத்தே
தான றிந்த செய்திகளைத் தப்பின்றிச்
சொல்லிடுவாய்
நழுவலிலாப் பேச்சாலே நாயகனாய் நிமிர்ந்தாய்
நாடெல்லாம் சுற்றிவந்தே நற்பணி யாற்றினையே
வழுவில்லா உன்பணியை நிர்மலா தொடர்வாரே
வாழவந்த நாயகனே வாழாது சென்றதேனோ.
ஈழத் தமிழர்களை இன்பத்
தமிழாலே
ஈர்த்தெ டுத்தாய்
வாழுங்கால் பேராசி ரியரா யிருந்தே
வாய்ப்புச் செய்தாய்
ஆழ்ந்தறி வைக் கண்டேனே ஆற்றலுள கவிஞனய்
கவிதை உறவினிலே
காழ்புணர்வு அற்றவுன்னைக் காலங் கருதாதே
காலன் கவர்ந்தானே.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|