கவிஞர ராஜிவ்காந்தி கவிதைகள் 

. ராஜீவ்காந்தி, செய்யாறு, தமிழ்நாடு.

வலி!

குளத்தில் நீராட்டி
கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி
அலங்கரிக்கும்
முதலாளிக்குத் தெரியுமா?
முன்பொரு நாள்
முரட்டுத்தனமாய் பிரம்பால் அடித்து
மாட்டின் முதுகில்
ஏற்படுத்திய
காயத்தின் வலி
இன்னும் தொடர்வது.

கொடிமரம்

நல்லவேளை, என்னிடம்
கிளைகளும் இல்லை
இலைகளும் இல்லை!
இருந்திருந்தால்...
மனிதக் கோடரிகளால்
மரணம் எனக்கு
நிகழ்ந்திருக்குமென
சந்தோஷமாய் சப்தமிட்டது
கொடிமரம்.