நெசவு
கவிஞர் மஞ்சுளா, மதுரை
மேசையின் மீது
அடுக்கப்பட்ட
புத்தகங்களினூடே
என் மனம்
சிக்கிக் கொண்டது
ஒரு புத்தகம்
திறக்கப்பட்டபோது
கண்கள் தீண்டிய
வரிகளோடு
மனம்
சுயம்வரம்
செய்தது
ஒரு கைப்பந்தாய்
மனம்
உருண்டு
வார்த்தைக் குழந்தைகளுடன்
விளையாடிய போது
பிரபஞ்ச நூலில்
அறிவை நெசவு
செய்து
தன்னை பதித்துக் கொண்ட
நட்சத்திரங்களாய்
கருத்துப் பூக்கள்
என்னுள் மின்னியது
இருண்ட
வானத்தினுள்
பாய்ந்தது
ஒளிக்கீற்று
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|