மரம் போல் வாழ்க..
கவிஞர் புதுவைத் தமிழ்நெஞ்சன்
நீ....
மரமாய் இருந்தால் போதும்
பறவையாய் வந்து அமர்வார்கள்
உன்னிடத்தில்
கூடுகட்டி வாழ்வார்கள்
உன்னிழலில்
இளைப்பாறுவார்கள்
ஆனாலும்
நன்றி மறந்து
உன்னை வெட்டி சாய்பார்கள்
காரணம்...
கேடரிக்கு காம்பாவது
உன்னிடத்தில் உள்ள கிளைதான்
பகைவனை விட
இரண்டகன் கொடியவன்
மரமாய் வாழலாம்
மரமென வீழலாமா?
கோடரிக்கு காம்புதராத
மரமாம் வாழ்வோம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|