ஹைக்கூகள்
முனைவர் வே. புகழேந்தி.
பெங்களூரு
வாசிப்பை
அபசுரமாக்குகிறது
ஹார்மோனியம் பெட்டி
மேல் விழுந்த மகிழம்பூ.
தீவிர பிரார்த்தனை
தொடர்ந்து இடையூறுச் செய்யும்
கோயில் மணி.
இறுதி யாத்திரை -
கூட்டத்துடன் கூட்டமாய் நகரும்
'செய்த' புண்ணியம்.
நடபை வளர்க்கிறது
பட்ட மரத்தின் பின்னணியில்
தேய்பிறை.
மயில் இறகு
குட்டிப்போட மறுக்கிறது
உயிரியல் நூலில்.
வானவில்
படிப் படியாய் நிறமிழந்ததும்
எதிரும் புதிருமாய் சூரியச்சந்திரன்.
பூத' உடல்
மலர் வளையங்களுடன்
'மனிதர்கள்'.
ஆசைகளுடன்
புத்தனாக நினைப்பவருக்காக
அநேக புங்கை மரங்கள்.
வெற்று அறைகளை
இருளால் நிரப்பியதும்
பூட்டுடன் வெளியேறும் ஒளி.
யோசிக்கிறேன்
இன்றெது பொருந்துமென்று
ஏராள முகமூடிகள்.
எப்பொழுது வெளியிடுமோ
காலையில் உள்வாங்கிய
அந்தக் கடல்.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|