ஹைக்கூ

கவிஞர் இரா.இரவி
 


வயிற்றுக்கு இல்லை ஏழைக்கு
வயிற்று எரிச்சல் விளம்பரம்
வைரத்திருவிழாவாம் !

கவனம்
வணிகம் செய்திட வந்தவன்
ஆண்டுவிட்டுப் போனான் !

ஆயுதம் விற்கும் ஆசையால்
தூண்டி விடுகிறான் போருக்கு
ஆயுத வியாபாரி !

கணினி யுகத்தில்
காட்டுமிராண்டித்தனம்
போர் !

இடத்திற்கான சண்டையில்
இழக்கின்றனர்
விலை மதிப்பற்ற உயிர்களை !

காட்டுகின்றனர் திரையில்
கலைநகரை கொலைநகராக
மாமதுரை !

சட்டம் ஒழுங்கு
ஒழுங்காய் இருந்தால்
நிம்மதி மக்களுக்கு !

வெற்றி தோல்வி
மாறி மாறி உண்டு
வன்முறையில் !

மனிதனை அழிக்கும் கத்தி
மனிதனைக் காக்கும்
புத்தி !

வேண்டாம் அரிவாள்
வேண்டும் அறிவாயுதம்
மனிதகுல வளர்ச்சிக்கு !

ஆசையைத் துறந்தார்
அரசர் ஆண்டியானார்
புத்தர் !

போதனையின் படியே
பாதை அமைத்தார்
புத்தர் !

மரணம் உறுதி
மனம் தளராதே
போதித்தார் புத்தர் !

பற்று அற்று வாழ்ந்தார்
பற்று வைத்தனர் மக்கள்
புத்தர் !

புத்தரை வணங்குவது
பெருமையன்று
பேராசை ஒழிப்பதே பெருமை !

சொத்துக்களில் எல்லாம்
பெரிய சொத்து
கல்வி !



 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்