ஹைக்கூ

கவிஞர் ஷர்ஜிலா யாகூப், கம்பம்
 


எந்த விலங்கின் கொம்போ?..
கருகிக் கிடக்கிறது
அடர்ந்த மழைக்காடு

விடியாத சூரியன்
சுவாசிக்க திணருகின்றது
நாளைய மொட்டு

மழைக்காடு எரிய
தேநீர் அருந்தி கொண்டிருக்கிறார்
புதிய நீரோ

அழியும் மழைக்காட்டில்
கருகிக் கிடக்கிறது
பறவையின் கூடு

பூமித்தாயின் நுரையீரல்
வேகமாக பற்றி எரிகிறது
அமேஸான் மழைக்காடு

சூரியனின் வெளிச்சம்
விடிந்தும் இருளாகயிருக்கிறது
காட்டை எரிக்கும் புகை

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்