ஊடல் உவகை

கவிஞர் கே.பி.பத்மநாபன்


ஊடிப் பிரிந்திட்டால் உண்மையிலே இன்பம்தான்
கூடிப் பெருகுமெனக் கூறிட்ட - தாடித்
தமிழரவர் வள்ளுவரால் தானென்றன் காதல்
இமிழ்கடலாய்ப் பொங்கியதே இன்று.

காதலில் ஊடல் கலந்தால்பே ரின்பமென
வேதம் மொழிந்திட்ட வள்ளுவரை - பாதம்
வணங்கிப் பணிந்ததனால் வாழுமென் காதல்
கணமேனும் சாகாது காண்.

நித்தம் இரவினிலே நீள்ஊடல் கொண்டதன்பின்
முத்தம் கொடுத்தால் முழுஇன்பம்:- அத்தனவன்
வள்ளுவரின் கூற்றை வழிமொழிந்து வாழ்ந்திட்டால்
உள்ளத்துள் ஓயா துவப்பு.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்