சத்திய சோதனையின் தத்துவவாதி
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
சத்திய சோதனை சத்திய சோதனை
சத்திய சோதனையே – என்றும்
உத்தமர் காந்தியின் ஒவ்வொரு அடியிலும்
எழுந்தது சாதனையே !
ஐப்பசி இரண்டினில்; ஆயிரத் தெண்ணூறு
அறுபத்து ஒன்பதனில் - உண்மை
செப்பிடும் காந்தியின் திருமுகம் இந்தியச்
செகத்தினிற் தோன்;றியதே !
போர்பந்தர் ஒரிசாவில் புண்ணிய பாரதப்
பூமியில் அவதரித்தார் – கல்வி
வேர்கொள இலண்டனில் மேவிய சட்டமும்
வித்;துவம் பெற்றுவந்தார் !
மோகன தாசெனும் கரம்சந்தக் காந்தியாய்
முத்தெனப் பரிணமித்தார் – அன்னை
தாகமாய்ச் சத்தியம் தாங்கியே மதுமாது
மாமிசம் வெறுத்துநின்றார் !
அரிச்சந் திரன்கதை ஆனநா டகத்தில்ல்
அறிந்தனர் உண்மையதே – வாழ்வில்
கரிசனை வாய்மையின் காரணம் நேர்மையின்
கண்டனர் காந்தியதே !
தென்னாபி ரிக்கவில் இந்திய ரும்நிறத்
தீமையும் கண்டுநொந்தார் – வெள்ளை
நிறத்தொடும் ஒருநீதி வேற்றுவர் ஒருநீதி
விளங்கிட எதிர்த்துநின்றார்!
புகையிர தத்திலே புரட்டி யெறிந்தவன்
பொல்லாத வெள்ளைஅவன் - அந்த
நிலையமே காந்தியை நிறுவிய சிலையொடும்
நிற்;குதே இன்றுஅம்மா !
இருபதும் ஒன்றென ஆபிரிக் காவிலே
இலங்கிய வருடமதில் - முட்டிச்
செருகிய நிறவெறி தீர்த்துமே அமைதியைத்
தீட்டினார் பெரும்பணியே!
இந்தியா திரும்பிய ஏந்தலாம் காந்திஜீ
இயற்றினர் போராட்டம் - நாட்டில்
இந்திய சுதந்திரம் இந்திய ஒற்றுமை
ஏற்றினர் சாத்வீகமே !
ஓத்துழை யாமையும் உள்;நாடு சட்டமும்
ஓங்;கிய போராட்டம் - வெள்ளையர்
மொத்திய ஆட்சியில் மூண்டதோர் அடிமையில்
வெளியேற்றும் போராட்டம்!
சம்பராண் போராட்டம் தண்டியின் ஊர்வலம்
உப்புசத் தியாகிரகம் - நேர்மைத்
தம்பிரான் போலவே தடியுடன் நடந்தவர்
தத்துவம் நியதிகண்டார்!
பிரார்த்தனை நடையிலும் பேணிய முறையிலும்;
பெரும்மகன் காந்தியினை –அற்றை
நரசுராம் விநாயக கோட்சே அழித்திட
நாயகன் மறைந்தனம்மா!
தோன்றிய பிறந்தநாள் தினமது விடுதலை
சொல்லியே நாடிருக்கும்;-பாரதம்
ஊன்றிய பணமெலாம் உத்தமர் காந்தியின்
உருவமும் பொறித்திருக்கும் !
மதுக்கடை சாத்திய மன்றெனப் பிறந்தநாள்
மதித்திட நாடுசொல்லும் - பாரதப்!
புதுக்குரல் காந்தியின் பெண்;;ணினம் காத்திடப்
பேரலை எடுத்துச்சொலும்
இந்தியக் காசெலாம் இலங்கிடும் காந்தியின்
எழிலுரு பதிந்திருக்கும் - ஆங்கே
சிந்திடும் இரத்தமும் சூழ்ந்திடும் பகையெலாம்
தீர்ந்திடக் குரல்பிறக்கும்!
மதுவிலக் கென்பதை மன்றிலு ரைத்திட
மார்தட்டி வந்தமகான் - அவர்
புதுமகன் மண்டேலா மார்ட்டின் லூதர்கிங்
புத்தியில் நிறைந்தமகான்!
ஆயிரத்துத் தொழாயிரம் நாற்பத்து எட்டினி;ல்
ஆனசனவரி முப்பதிலே - காந்தியார்
நேயவெள்ளி தினமதில் கோட்சேயின் சூட்டினில்
நிலத்தையே பிரிந்தரம்மா!
தீந்தமிழ்ப் பாவலன் தீவகம்
வே.இராசலிங்கம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|