குறுங்கவிதைகள்
கவிமாமணி "இளவல்"
ஹரிஹரன்
கால்நடக்கும்
கடும் வெயிலில்
பழி வாங்குகிறது
காதறுந்த செருப்பு
வெறிச்சோடிக் கிடக்கும்
வீடு நிறைந்திருக்கிறது
அம்மாவின் நினைப்பு
கழைக்கூத்தாடிச் சிறுமியின்
கவனந் தவறா ஆட்டம்
மறக்கவைக்கிறது கொஞ்சம்
நேர்முகத்தேர்வில் தோல்வி
மரங் களை அறுத்துப்
பயிர் செய்கின்றோம்
வெயில் விளைச்சலுக்கு
தோட்டாவைக் கண்டும்
கூர் மழுங்காத
எழுத்தாணிகள்...
உயிர்போன பின்னர்
கூர் இருந்தென்ன....
இல்லாமல் இருந்தென்ன....
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்