பயணம்
கவிஞர் உமை பற்குணரஞ்சன், கனடா
இடரறியா இரவொன்றில்
ஏகாந்தப் பொழுதுகளில்
எழுதாத காடுகளைக்
கிறுக்கிச் செல்லும்
சிறுநதியின் சல சலப்பில்
சில்லென்று உள்ளிறங்கும்
ஊமைக் குளிர் பற்றி
உள்ளிருக்கும்
தன்னிலை தொலைத்து
உருக்குலைந்த
சிறு குவியல்
உறவறுத்த ஒற்றைக்
கூழாங்கல் விடுவித்த
சிறுகாற்று
கொப்பளித்த
நுரை மிதப்பில்
முகம் பார்த்த
முதிர் இலையின்
முடிவறியாப்
பயணத்தின்
கடை நாழி
கடலிடத்துச்
செல்லும் வரை.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|