தடுப்புகள் தடையில்லை..
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
ஊற்றுநீரை அடைப்பதுவும்
காற்றைப் புட்டியில் அடைப்பதுவும்
கற்பனை ஊற்றைத் துடைப்பதுவும்
விற்பன்னராலும் இயலாததாகும்.
பூமி வெடித்துப் பிளப்பதுவும்
பூகம்பம் சடுதியாய் உருவாவதும்
பூஞ்சணமான புற்றுநோய் பீடிப்பதுவும்
பூரணமாய் யாரும் அறிவதில்லை.
தானே இயற்கையாய்த் தோன்றும்
தானே இயற்கையாக அழியும்.
வீணே போடும் தடைகள் காலத்தில்
காணாமல் போகும் காற்றின் ஓட்டமாய்.
சாயாத நம்பிக்கை உயிரின் தெம்பாய்
ஓயாத முயற்சி வாழ்வின் பயிற்சியாய்
தீயாத இலட்சியத்தை வாழ்வில் அடைந்தால்
தேயாத இன்பம் வாழ்வில் தொடரும்.
kovaikkavi@gmail.com
|