தோற்றுப்போன தெய்வங்கள்

கவிஞர் நாகை ஆசைத்தம்பி, கோவை
 




ேண்டுதல்கள்
தொழுகைகள்
ஜெபங்கள்
இவையெல்லாம்
இயற்கைக்கு முன்னே
ஒன்னுமில்லையென
மனிதனுக்கு
அறிவுரை சொல்லிச்சென்றது
டிஜிட்டல் இந்தியா என
பெருமை பேசுகின்றோம்
வல்லரசு என
வாய்கிழிய பேசுகிறோம்
சந்திரனுக்கும் செவ்வாய்க்கும்
ஆட்களை அனுப்பும் நம்மால்
நாம் வாழும் பூமிக்குள்ளவே
ஆட்களை அனுப்ப இன்னும்
யோசிக்கமுடியல,,
இன்னும் எத்தனை சுர்ஜித்துக்களை
நாம் காவுக்கொடுக்க போகிறோம்,,,?!
தோற்றுப்போனது மீட்புப்பணி
மட்டுமல்ல
தெய்வங்களும்தான்,,,!

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்