ஹைக்கூ கவிதைகள்
கவிமுகில் நாகை ஆசைத்தம்பி, கோவை
பிஞ்சு குழந்தைகளின்
நெஞ்சைத்தொட்டு செல்கிறான்
பஞ்சு மிட்டாய்காரன்
நின்றுப்போன மழைக்காக
கண்ணீர் வடிக்கிறது
சொட்டுச்சொட்டாய் இலைகள்
சரம் சரமாய்
தொகுக்குகின்றேன்
ஹைக்கூ கவிதைகள்
தான் படிக்காவிட்டாலும்
பலப்பேரை படிக்கவைக்கிறான்
நாளிதழ் போடும் சிறுவன்!
சுருங்கிப்போன நீர்நிலைகள்
விரிவாக்கம் செய்யப்படுகிறது
அடுக்குமாடி குடியிருப்பு!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|