குறுங்கவிதைகள்
கவிஞர் இரா.இரவி
வெட்கப்படுவோம்
பேரிடர் மேலாண்மையில்
பின்தங்கியே உள்ளோம்!
அழகு மட்டுமல்ல
மருத்துவ குணமும் உள்ளது
செம்பருதிப் பூ!
முற்றுப் பெறட்டும்
ஆழ்குழாய் மரணம்
சுசீத்துடன்!
கலப்படம் தான்
பெயர் தான்
சூரியகாந்தி எண்ணெய்!
செவ்வாய் கிரகம்
செல்வது இருக்கட்டும்
மண்ணுயிர்கள் காப்போம்!
எழுச்சி பெறும்
சமுதாயம்
மூடநம்பிக்கை ஒழிந்தால்!
நிலவின் ஆராய்ச்சியை
நிறுத்தி விட்டு
மண்ணை ஆராய்வோம்!
வானம் வசமானது
பூமி வசமாகவில்லை
மனிதனுக்கு!
வேண்டாம்
வானத்தில் வைகுண்டம்
சொர்க்கமாக்குவோம் பூமியை!
சாதிச் சங்கங்களின்
கோரப் பிடியில்
மறைந்த தலைவர்கள்!
வல்லரசாவது இருக்கட்டும்
முதலில் நல்லரசாகட்டும்
இந்தியா!
முக்கியமன்று உருவ வழிபாடு
முக்கியம் வழிநடத்தல்
நல்ல தலைவர்கள்!
எல்லா மதக் கடவுளையும்
வேண்டினார்கள்
யாரும் காப்பாற்றவில்லை!
ஆண் பெண்
பேதம் வேண்டாம்
எல்லாக்குழந்தையும் ஒன்று தான்!
நசுங்கிச் செத்தது
மனிதனின் கையால்
கடித்த எறும்பு
ஆறடி நிலம் கூட
சொந்தமன்று மனிதனுக்கு
எரித்தால் அதுவுமில்லை!
அறிவியில் உலகம்
ஒழிக்க முடியவில்லை
கொசு!
வேண்டாம் ஆணவம்
வீழ்த்தி விடும்
வேதனையில்!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|