ஆழமறியாத இலங்கை அரசவைத் தேர்தல் 1919.

புலவர் முருகேசு மயில்வாகனன்

 

ஆழ மறியாதே ஆராரோ காசுகட்டி

     அரசவைத் தலைவ ராவ தற்கு

ஆழக் கனவுகண்டே ஆட்சி பீடம்

     ஏறத்தான் எத்தனித்தே ஏக்க முடனே

ஊழல் செய்யமாட்டே னென்றே உறுதியுடன்

     ஊரூராய்ச் சென்றே ஊழலை மறைத்தே

ஈழத் தமிழர்க்கு ஏற்ற பதிலின்றி

      ஏதேதோ சொல்லியே ஏமாற்றி வருகிறார்.

 

போராட்ட காலத்தில் போட்ட குண்டை

     போற்றியே காக்கின்ற பொய்யர்க்கு வாக்கா?

சீராகச் சிந்தித்தே செயற்பட் டாலே

     சிறந்ததோர் தலைவரைத் தேர்ந்து கொள்ள

ஊராரே உணர்நதுகொண்டால் உங்கள் வாக்கை

     உண்மைபேசும் அபேட்ச கர்க்கு அளித்தே

சீரான ஆட்சியொன்றை சிறப்பாய் அமைக்க

     சிந்தித்துச் செயற்பட்டால் சிறப்புத் தானே!

 

நடுகல்லாய் ஆழ்ந்திருக்கும் மாவீரச் சொத்தை

     நாம்மறந்தால் வேறுயார் நாடி நிற்பர்

இடுகாடாம் மாவீரத் துயிலகத்தை இடித்தே

     இராணுவ முகாம்அமைத்த மகிந்த கூட்டம்

வடுபோக்க வருகிறார் வாக்குக் கேட்டே

     வாழ்விழந்த வாக்காளர் வாய்ப்புங் கட்கே

தடுமாற்றம் ஏதுமின்றித் தக்கோரைத் தேர்ந்தே

     தப்பின்றி வாக்களித்தே தண்டிப் பீரே.

 

சிங்களத் தீவென்ற சிறப்பை மாற்றிச்

     செந்தமிழர் முஸ்லிம்கள் சேர்ந்தொன் றாக

பங்கமிலா நடொன்றைப் பாரோர் போற்றப்

     பற்றிநிற்கச் செய்வதுவே பல்லோர் நோக்கு

திங்களொன்றில் வருகின்ற தேர்தலில்  வாக்கைச்

     சிந்தித்தே நல்லவர்க்குச் சேர்ப்பிப் பீரே

சங்கமித்தை மட்டுமல்ல மணிமே கலையும்

சங்கமித்த நாடிதனை நன்கு காப்பீர்.

 

புத்தரைப் பின்பற்றும் புனித மற்ற

     பூசலர்க்கு அடிபணியாப் புதுமை காண்பீர்

சித்தமுடன் செயற்பட்டால் சிறப்புத் தானே!

      சிந்தித்து வாக்களித்தே தீர்வு காண்பீர்

முத்தான ஈழத்தை முறையாய்க் காத்தே

      முத்தோடு இரத்தினமும் தெங்கு தேயிலை

இத்தனையும் கொண்டதாம் இந்த நாட்டை

       ஏற்றமுற வைப்பதெங் கடன் தாமே.

 

வாக்குத்தான் அரசையே மாற்றி அமைக்கும்

     வல்லாயுதம் என்றுணர்ந்தே வாக்க ளிப்பீர்

ஊக்கமாய் வாக்களிப்பு நிலையஞ் சென்றே

      உங்களது பொன்னான வாக்கைச் செலுத்தி

தாக்கிஅழித் தோரினங் கண்டு அவரது

       தவறுக் கெதிராக நல்லாட்சி காண்போம்

சீக்கிரமாய்ச் சென்றேதான் நல்லவர்க் களிக்கும்

        தூயநல் வாக்கேதான் தூது சொல்லும்.


 


 




 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்