|
நான்
என்பது
செருக்கல்ல
எனது
நம்பிக்கை..
கவிஞர்
வித்யாசாகர்
வானந்
தொடுந்
தூரம்
அது
நாளும்
வசமாகும்,
பாடல்
அது
போதும்
உடல்
யாவும்
உரமேறும்;
பாதம்
அது
நோகும்
பாதை
மிக
நீளும்,
காலம்
ஒரு
கீற்றாய்
காற்றில்
நமைப்
பேசும்;
கானல்
எனும்
நீராய்
உள்
ளாசை
வனப்பூறும்,
மூளும்
நெருப்
பாளும்
நிலமெல்லாம்
நமதாகும்;
கனவே
கொடை
யாகும்
கடுகளவும்
மலை
யாகும்,
முயன்றால்
உனதாகும்
உழைப்பால்
அது
பலவாகும்;
நேசம்
முதலாகும்’நொடி
தேசம்
உனதாகும்,
அன்பில்
பிரிவில்லை’
உயி
ரெல்லாம்
அமுதூறும்
வெற்றி
நிலை
யாகும்
மனம்போல
அது
மாறும்,
கடல்
மூடும்
அலைபோல
நினைப்
பொன்றே
வரமாகும்;
நானென்று
கொண்டாய்
இனி
நாமென்று
காணேன்
உடல்
தீதொன்று
மில்லை
உள்
உள்ளே
நான்
நீயே!
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|
|
|
|