இனியநாள் தையின் நாளே !

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்


 

 

இரவிலும் நிலவு நீந்தும்
    
  இதந்தரும் உறவு மாந்தும்
இரவியும்
கணிதம் மாறி
    
  எழுகறை வடக்கு நோக்கும்
தரவினில்
இருப்ப தெல்லாம்
    
  தடம்பதித் தியங்கும் பாதை
மரபொடும்
தையாம் திங்கள்
    
  மகத்துவம் உதிப்ப தாகும்!

பூமியும் பிரபஞ் சத்தும்
    
  பிறந்தநாள் அந்நாள் தோன்றிச்
சாமியும்
வகுத்த நோக்கிற்
    
    சரித்திரம் தரையுண் டாகும்
மீமிசைப்
பதிவுண் டாக்கும்
       விளங்கிடும்
முறைகள் யாவும்
போமிசை
யாகா தையா
       பொன்னொளி
மாற்றங் காணும்!

உலகினிற் பலநா டுள்ளும்
        உன்னத
கனடா நாடும்
அலகிடும்
மரபும் தைநாள்
        அலகுகொண்
டரசு போற்றும்
சிலம்பெனத்
திருநாள் பாடும்
       சிறப்பிடும்
பொங்கல் நாளே
கலங்கரை
விளக்க மாகக்
       கனிந்தது
தையின் கோளே!

தைதரும் இருப்பி னோடும்
        தமிழ்தரும்
பெருமை யோடும்
வையமும்
மரபும் மாண்பும்
        மதித்திடும்
அரசி னோடும்
மெய்தரும்
மேதி னிக்கண்
       விளங்கிடும்
வளமும் வாழ்வும்
கைவரப்
பெற்ற பொங்கல்
       கனிந்தது
உலக நாளே !

பொங்கலோ பொங்கல் நாளே
        புண்ணியம்
தந்த நாளே
மங்களம்
படைத்த பூமி
       மதிதரும்
கவியின் வீடே
தங்குக
அமைதி இன்பம்
        தரணியும்
தமிழும் பண்பும்
எங்குமே
வெளிச்ச மாகும்
       இனியநாள்
தையின் நாளே!

 

தீந்தமிழ்ப் பாவலன் தீவகம் வே.இராசலிங்கம்

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்