தைப்பெங்கல்
கவிஞர் கந்த.ஸ்ரீபஞ்சநாதன்
உழவர்கள் அகம்மலர்ந்து
உரிமையுடன் கொண்டாடும்
பழமைவாய்ந்த விழாவாகும்
புனிதமான தைப்பொங்கல்
அழல்வண்ணன் இயக்குகின்ற
அழற்கதிரோன் செயல்தன்னை
வழமையாக நன்றிகூறி வணங்குகின்ற
சம்பவமே
வையகத்தில் முன்னோர்கள் வானத்து
வெய்யோனை
ஜயமின்றிக் கும்பிட்டு
ஆனந்தமாய் வாழ்ந்தனரே
வயல்களது நீர்யுயர விசும்பினது
சூரியரே
அயராது உழைக்கின்றார் அவரின்றி
உழவரில்லை
உழுகின்றோர் இல்லாவிடில்
உண்மையிலே உயிர்களில்லை
அழுக்கான காற்றினையே
அந்தரத்தில் விடுவதினால்
அழுகின்றார் மழையின்றி அண்டத்தை
தூய்மையாக்கி
உழுநர்கள் வாழ்வதற்கு உய்யவழி
தேடிடுவோம்
இகத்தினில் மனிதர்கள்
இன்னலையும் களைவதற்கு
அகத்தினிலே தைப்பொங்கல்
அரியநாளில் எல்லோரும்
பகலவனின் ஒளிக்கதிராய்
பக்குவமாய் ஒன்றுபட்டு
சுகமான அன்பினையே சுயமாக
அளிப்பீரே
அழல்வண்ணன் - சிவன்
அழற்கதிரோன் - ஞாயிறு
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|