பனிகொட்டும் நாடெங்கள் நாடே
புலவர் முருகேசு மயில்வாகனன்

பனிகொட்டும் நாடுகளில் பாசக் கனடாவின்
பாதிப்பு அதிகந்தான்
பெய்யும் பனியால்
தனதானியம் யங்களும் தப்ப வில்லை
மனிதவாழ்வு மங்கிடவே
மதியி ழந்தே
இனமறியாத் துன்பமும் இணைந்து கொள்ள
செய்வதறி யாச்செயற்
பாடேது மின்றிச்
மனமழிந்தே மாற்றுக் கருத்தின்றி மயக்கத்தால்
மாசுற்ற காலமதில்
மாறுபட் டிருந்தனரே.
கொட்டும் பனிகண்டே கோடையும் மறைந்திடவே
கொட்டும் பனியுடனே
குளிர்காற்றும் சேர்ந்திடவே
முட்டிமோதும் வாகனங்கள் மட்டுமா? மனிதரும்
மோசமான பாதிப்புக்
குள்ளாகும் பரிதாபம்
சட்ட ஒழுங்குகளும் சற்றே தளர
சாதனை யாளராம்
பொலிஸ்கண் காணிப்பு
விட்ட பாடில்லை வரைந்தங்கே தம்பணியை
விரைந்து செய்கின்ற
சீரும் சிறப்பே!
பாதிப்பு மக்களுக் கென்றாலும் பயனுண்டே
சறுக்கி விளையாடும்
சாதனை யாளர்க்கு
கோதுமை விதைப்போர்க்குக் கொடிய பனிதான்
கோணாத விளைச்சலையும்
கோலோச்ச வைத்திடுமே
பாதுகாப்பு உடைகளைப் பக்குவமாய் அணிந்துமே
பல்தொழில் தேடியே
பக்குவமாய்ச் செல்வதுண்டே
சாதனை என்றேதான் சாற்றுதல் வேண்டுமே
சற்றேயே சிந்தித்தால்
சாதனை தானே.
அழகுக்கோர் அணிகலனாம் பனியின் தூறல்
ஆழமாய்ச் சிந்தித்தால்
இயற்கையின் ஆற்றலது
வழுக்கி விழுவோரால் பாதிப்ப ரசுக்கும்
வலுவான ‘இன்சூரன்ஸ்’
நிறுவனங் கட்குமே
இளைஞர்க்கோர் இன்பந்தரு இனிய நன்னாளே
இன்பமும் துன்பமும்
இணைந்ததே வாழ்வு
களைத்திருப் போர்க்கோ கனடாவின் கொடுப்பனவு
காலந் தவறாதே வங்கியிற்
சேருமே.

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|