காக்கைச் சிறகினிலே


கவிஞர் மஞ்சுளா, மதுரை


 

இரவு முழுவதும்

விழித்திருந்து

முழு நிலவை

பார்த்ததொரு காகம்

விடியலில்

தன் கனவை

விரித்து பறக்கிறது

விரித்த சிறகில்

இனமோ நிறமோ

பேதம் பார்ப்பதில்லை

வானம்

ஒரு விடியலை

இப்படித்  தொடங்குமா

மனித இனம்?

               


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்