பெண்னெனில்
தேவதையோ..
வித்யாசாகர்
பொன்னிற காட்டில்
வெண்ணிறம் உடையாள் இவள்,
சங்க காலம்
சூட மறந்த
இந்த கால
-
செஞ்சூட்டு
ஒளியாளிவள்..,
இவளின்,
இழுத்து சுற்றிய சேலைக்குள்
- ஒளித்து வைத்துள்ள
இன்பத் தேர் அதிசையமும்,
கடித்து இழுக்க
மதுரம் தெறிக்கும்
சிலிர்ப்பூட்டும் செவ்விதழும்,
ஈரம் படிந்த இதழ்களிலே
ஒத்தியெடுக்க
மிகுந்த
முத்தங்களும்..,
கண்ணம் முழுக்க கதகதப்பில் -
குவிந்த
வர்ண காதல் ரேகையும்,
ஆசைகளில் புதைந்து போன
நளினத்தின்;
வாலிப்பு குறையாத வளைவு சித்திரமும்,
மேனி அழகை கூட்டிக் காட்டும்
கழுத்தாய் பூத்த -
சங்கு மலரும்,
அகன்று விரிந்த மார்பின்
கவர்ச்சி மறைத்தும்;
மலர்ந்தும்;
தொடும் உணர்வில் பூக்கும் மேனி -
இரண்டெழிலும்,
மூச்சுக் காற்றில் மேனி பரவி
இடைகொடி வளைத்து நடனமாட
அழகு
கொஞ்சும் மேட்டுக் குழி -
சிணுங்கல்
ஜாலமும்,
இன்னும் தேடி கிடைக்கும் வர்ணனையில்
சொல்ல மிகாமல் உள் புதைத்த -
பெண்-
மயிலின்;
பெண்மை
வாழ் நதியலை சுகந்தமும்,
அப்பப்பா!! பெண்ணிவளே;
பெண்ணிவளே;
ஓ'
பெண்ணென்றால் தேவதையோ -
என்னவளே;
அடி
என்னவளே....
இதயம் தட்டி உள்புகும்
வெப்ப நெருப்பே;
பஞ்சு பூட்டிய மேனியினால் - நெஞ்சு பூரித்தவளே
வா..
வாசல் திறக்காத வழிக்குள் புகுந்து
காமம்
சொட்டாத காதல் தேரிழுப்போம்!
வா..!!
vidhyasagar1976@gmail.com
|