இளமையில் உந்தி முயல்

கவிஞர் கே.பி.பத்மநாபன்

வற்றா உணர்வுடனே வாழ்வின் சுவையறிந்து
முற்றாக வாழ்வில் முழுமையுற - வெற்றாய்
உளம்சோர்ந் தமராமல் உற்றவலி யோடே
இளமையில் உந்தி முயல்.

அறிவின் சிகரத்தை ஆனவரை எட்டிச்
செறிவுறு ஞானச் செழிப்பால் - நெறியாய்
வளமுடனே ஞாலத்தில் வாழ்ந்தோங்க உன்றன்
இளமையில் உந்தி முயல்.

அன்பும் அமைதியும் ஆனந்த மும்கொண்ட
நன்முதுமை வாழ்வில் நலமடைய - இன்றே
விளங்கும் மனிதத்தை வீறுடனே ஏற்றிங்(கு)
இளமையில் உந்தி முயல்.



கே.பி.பத்மநாபன்,
6, இந்திரா நகர், சாந்தி கியர்ஸ் அருகில்,
சிங்காநல்லூர், கோவை - 641005
அலைபேசி எண் : 9488153283



 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்