விடுதி
ந.முத்து,
கோவை
அயல்நாட்டு
ஆய்வரங்க அறிஞருக்கும்
வாழும் வள்ளுவருக்கும்
அவர் தம் வம்சத்தாருக்கும்
ஐந்து நட்சத்திர விடுதி
நாடாளும் அமைச்சருக்கும்
அவர்தம் அள்ளைகளுக்கும்
நான்கு நட்சத்திர விடுதி
முக்கியப் புள்ளிகளுக்கும்
சிக்கியப் புள்ளிகளுக்கும்
மூன்று நட்சத்திர விடுதி
இளிக்கும் வாயுடைய
இந் நாட்டு தமிழ் அறிஞருக்கு
இரண்டு நட்சத்திர விடுதி
ஆட்சிப்பணி அலுவலர்களுக்கு
அடுத்த நட்சத்திர விடுதி
காவல் பணியாளர்களுக்கோ
கல்வி நிலையமே விடுதி
உதட்டிலும் உள்ளத்திலும்
தமிழைத் தவிற வேறு அறியா
உடன் பிறப்புக்கு
ஆயிரம் நட்சத்திரங்கள் பூத்திருக்கும்
வீதியே விடுதி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
|