கொரோனா இது சரிதானா
பாவலர் கருமலைத்தமிழாழன்
நுண்ணுயிரி
தீநுண்மி
கிருமி
என்று
நுவல்கின்ற
உயிர்கொல்லி !
கள்ளன்
போன்றே
கண்ணுக்குத்
தெரியாமல்
காற்றின்
மூலம்
கண்காது
வாய்மூக்கின்
வழியே
சென்று
தொண்டையிலே
தங்கிமெல்ல
நுரையீ
ரல்மேல்
தொற்றிப்பல்
லாயிரமாய்க்
குட்டிப்
போட்டு
வெண்ணெய்போல்
சளிசேர்த்து
மூச்ச
டைத்து
வேதனையைத்
தருகின்ற
கொரோனா
கூற்றே !
ஒன்றுகூடி
வாழவேண்டும்
என்று
முன்னோர்
ஓங்குரைத்த
சொல்மாற்றிப்
பிரித்து
வைத்தாய்
நின்றுநலம்
கேட்பதற்கும்
வழிய
டைத்தாய்
நிறைமுகத்தைத்
திரையிட்டு
மறைத்து
வைத்தாய் !
வன்முறைதாம்
வெடித்தபோல
நான்கு
பேர்கள்
வருவதற்கும்
நடப்பதற்தும்
தடைவி
தித்தாய்
பன்னூறு
தொழிற்சாலை
முடக்கி
வைத்தாய்
பட்டினியில்
பலபேரைத்
துடிக்க
வைத்தாய் !
இறைவனையும்
கருவறைக்குள்
பூட்டி
வைத்தாய்
இரவுபகல்
சாலைகளில்
வெறுமை
வைத்தாய்
பறையொலியே
நாள்முழுதும்
கேட்கு
மாறு
பாடைகளின்
ஊர்வலங்கள்
நடத்தி
வைத்தாய் !
கறைசெய்தான்
பூமிதனை ;
மாசு
சேர்த்துக்
காற்றுவானை
இயற்கையினைக்
கொன்றான்
என்றே
அறைந்துமாந்த
இனந்தன்னைத்
திருத்தி
டாமல்
அடியோடு
அழிப்பதுவோ
சரியா
சொல்வாய் !
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|