அஞ்சற்க...

கவிஞர்  புதுவைத் தமிழ்நெஞ்சன்

கூட்டம் கூட்டமாய்
எருதுகள்,மான்கள் இருந்தும்
ஓட்டம் எடுக்கிறது
ஒரு சிறு நரிக்காக..
கொம்புகள் இருப்பதை மறந்து 

தன்வலிமை  அறியாது
அங்குசத்திற்கு அஞ்சி
கடைகள் தோறும்
நம்பிக்கை இழந்து
தும்பிக்கை நீட்டி
காசு கேட்கிறது. 

எதிரிகளை கண்டதும்
முட்களை சிலுப்பிடும்
முள்ளம்பன்றியாகு 

பூனைகள் உள்ள வீட்டில்தான்
எலிகள் குடும்பம் நடத்துகிறது 

புலிகள் வாழும் காட்டில்தான்
மான்களும் துள்ளி குதிக்கிறது 

பருந்துகள் இருக்கும் உலகில்தான்
முயலும் தாவி ஓடுகிறது 

பாம்புகள் இருக்கும் குளத்தில்தான் மீன்களும் நீந்தி மகிழ்கிறது 

அஞ்சுபவன் வாழ்வதில்லை
கெஞ்சுபவன் உயர்வதில்லை

   




உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்